சுடச்சுட

  

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "தூண்டல்' என்னும் ஊக்கப் பயிற்சி  திங்கள்கிழமை தொடங்கியது.
  ஜூலை 8ஆம் தேதி வரை ஒருவாரம் நடைபெறும் இப்பயிற்சியின் தொடக்க விழாவுக்கு,  பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி தலைமை வகித்து பேசுகையில்,  பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு வரும் மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார் செய்துகொள்வது; உயர் கல்வியின் முக்கியத்துவம்,  தொழில்முனைவோராக உருவாவது,  ஆராய்ச்சியில் தனித்துவத்துடன் விளங்குவது ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பாளர் பி.மாதவ சோமசுந்தரம் வரவேற்றார்.  பல்கலைக்கழக பதிவாளர்  எஸ்.சந்தோஷ் பாபு தொடக்கவுரையாற்றினார். இணை ஒருங்கிணைப்பாளர் வி.பாலமுருகன் பயிற்சி குறித்து விளக்கினார். 
   உலக சாதனையாளர் விருது பெற்ற கே.விசாலினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,  மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.  
  தொடர்ந்து, பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் தங்கள் துறையின் சிறப்புகளை விவரித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உரையாற்றினர்.  இதில், முதலாமாண்டு மாணவர் - மாணவியர்  பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai