சுடச்சுட

  

  பாவூர்சத்திரத்தில் கிஸான் சம்மான் நிதித் திட்ட சிறப்பு முகாம்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாவூர்சத்திரத்தில் பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது. 
  இதுகுறித்து தென்காசி வட்டாட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  பாவூர்சத்திரத்தில் உள்ள கல்லூரணி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெறும்  இம்முகாமில் குலசேகரப்பட்டி, கல்லூரணி ஊராட்சிப் பகுதி விவசாயிகள் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பட்டா நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக நகல், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.  புதன்கிழமை (ஜூலை 3) மேலப்பாவூர், திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி பகுதிகளில் நடைபெறுகிறது.  இதில்,  அப்பகுதி விவசாயிகள் தகுந்த சான்றுகளுடன் சென்று விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai