சுடச்சுட

  

  "மரக்கன்றுகள் பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி வழங்கலாம்'

  By DIN  |   Published on : 02nd July 2019 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடையநல்லூர் நகராட்சியில், மரக்கன்றுகளை கூண்டுகள் அமைத்துப் பாதுகாப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு சமூக ஆர்வலர்கள் நிதி வழங்கலாம் என ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூர் நகராட்சியை பசுமையான நகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக நீர்நிலைப் பகுதிகளை மராமத்து செய்யும் பணியும்,தொடர்ந்து நீர்நிலைகளை சுற்றி மரக்கன்றுகளை அமைத்து, பேவர் பிளாக் நடைபாதை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரம் முழுவதும் சுமார் 3000 மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மரக்கன்றுகளை பாதுகாப்பதற்கு கூண்டுகள் செய்வதற்கு தேவையான நிதியைஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி,கடையநல்லூர் பஜார் கிளை, கணக்கு எண்- 138201000038200 மூலம்  சமூக ஆர்வலர்கள் வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai