நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ரயில்களின் நேர மாற்றம் அமல்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் விரைவு மற்றும் பயணிகள் 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட விரைவு மற்றும் பயணிகள் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, வண்டி எண் 22621 ராமேசுவரம்- கன்னியாகுமரி (வாரம் மும்முறை) விரைவு ரயில் ராமேசுவரத்திலிருந்து இரவு 8.50 மணிக்கு பதிலாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 12631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலிக்கு காலை 7.05 மணிக்கு பதிலாக காலை 6.45 மணிக்கு வந்து சேரும். வண்டி எண் 16791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16792  பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 16790 ஸ்ரீவைஷ்ணவ தேவி கட்ரா - திருநெல்வேலி (வாராந்திர) விரைவு ரயில் திருநெல்வேலிக்கு அதிகாலை 12.55 மணிக்கு பதிலாக அதிகாலை 12.45 மணிக்கு வந்து சேரும். வண்டி எண் 16788 ஸ்ரீவைஷ்ணவ தேவி கட்ரா - திருநெல்வேலி  ஹிம்சாக லிங்க் விரைவு ரயில் திருநெல்வேலிக்கு மாலை 6.30 மணிக்கு பதிலாக மாலை 6 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து இரவு 7.30 மணிக்கு பதிலாக இரவு 7.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16130  தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இணைப்பு விரைவு ரயில் வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு பதிலாக காலை 8.25 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 16102 கொல்லம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக முற்பகல் 11.55 மணிக்கு புறப்படும். வண்டி எண் 16182 செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 12662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 6.15 மணிக்கு பதிலாக மாலை 6.10 மணிக்கு புறப்படும்.
பயணிகள் ரயில்கள்: வண்டி எண் 56701 புனலூர்- மதுரை பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்துக்கு காலை 6.45 மணிக்கு பதிலாக காலை 6.35 மணிக்கு வந்து சேரும். வண்டி எண் 56732 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 6.35 மணிக்கு புறப்பட்டு, மதுரை ரயில் நிலையத்துக்கு காலை 10.40 மணிக்கு பதிலாக காலை 10.35 மணிக்கு வந்து சேரும்.
வண்டி எண் 56736 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் செங்கோட்டை  ரயில் நிலையத்திலிருந்து மாலை3.55 மணிக்கு பதிலாக மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்துக்கு மாலை 7.35 மணிக்கு பதிலாக மாலை 7.30 மணிக்கு சென்றடையும். வண்டிஎண் 56796 செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் ரயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.45 மணிக்கு பதிலாக காலை 6.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 9 மணிக்கு பதிலாக காலை 8.55 மணிக்கு வந்தடையும். வண்டி எண் 56802 செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை5.55 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 56797 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 9.25 மணிக்கு பதிலாக காலை 9.20 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை11.50 மணிக்கு பதிலாக காலை 11.30 மணிக்கு சென்று சேரும். வண்டி எண் 56801 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு காலை 9.25 மணிக்கு பதிலாக காலை 9.15 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 56803 திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு மாலை 4.45 மணிக்கு பதிலாக மாலை 4.20 மணிக்கு சென்றடையும்.
வண்டி எண் 56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு சென்றடையும். வண்டி எண் 56763 திருநெல்வேலி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 9.30 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூருக்கு முற்பகல் 11 மணிக்கு பதிலாக முற்பகல் 11.35 மணிக்கு சென்றடையும்.
வண்டி எண் 56035 திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து காலை 9.15 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு முற்பகல் 11 மணிக்கு பதிலாக நண்பகல் 12.10 மணிக்கு வந்தடையும்.
வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும். 
வண்டி எண் 56737 செங்கோட்டை - கொல்லம் பயணிகள் ரயில் செங்கோட்டையிலிருந்து நண்பகல் 12.30 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு மாலை 5.20 மணிக்கு பதிலாக மாலை 3.55 மணிக்கு சென்றடையும்.
வண்டி எண் 56741 தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 8.35 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கு வந்து சேரும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com