இறைச்சிக்காக ஆடுகளை வெட்ட அறுப்புமனையை பயன்படுத்த வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

மேலப்பாளையத்தில் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை அறுப்புமனையில் வைத்தே வெட்ட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலப்பாளையத்தில் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகளை அறுப்புமனையில் வைத்தே வெட்ட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலெட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள், சுகாதாரமற்ற முறையில் தெரு ஓரங்களிலும், கடை ஓரங்களிலும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் ஆங்காங்கே தெரு ஓரம் மற்றும் வாருகால் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும்  மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, ஆடு இறைச்சி கடைக்காரர்களுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தில், ஆடுகள் அனைத்தும் மாநகராட்சி ஆடு அறுப்பு மனையில் வெட்டப்பட வேண்டும். மற்றபடி, தெரு ஓரங்களிலும், கடை ஓரங்களிலும் வைத்து ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுமானால், அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை கண்காணிக்க, மாநகர நல அலுவலர் டி.என்.சதீஸ்குமார் தலைமையில், சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்களை கொண்ட  இரண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை மேலப்பாளையம், ஆசாத் ரோடு பகுதியில் நடைபெற்ற ஆய்வின் போது, இறைச்சி விற்பனை கடை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகள் வெட்டப்படுவதைக் கண்டறிந்த கண்காணிப்புக் குழு, இறைச்சியை பறிமுதல் செய்ததோடு, ரூ.2, 500 அபராதம் விதித்தது.
எனவே, இறைச்சிக்காக ஆடுகளை வெட்டுவோர் மாநகராட்சி ஆடு அறுப்பு மனையில் வைத்துதான் வெட்டவேண்டும். அவற்றை சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com