குறுக்குத்துறை முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்
By DIN | Published On : 05th July 2019 08:23 AM | Last Updated : 05th July 2019 08:23 AM | அ+அ அ- |

திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி 108 சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.