தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுகோள்
By DIN | Published On : 05th July 2019 08:22 AM | Last Updated : 05th July 2019 08:22 AM | அ+அ அ- |

தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அமைப்பு சாராத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாக்கவும், முறைப்படுத்தும் நோக்கத்திலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களின் பதிவில் ஆதார் எண்களை முழுமையாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே, இதுவரை ஆதார் அட்டை நகல் தாக்கல் செய்யாத நலவாரிய உறுப்பினர்கள் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், இரண்டாவது தளம், பிளாக் எண் 39, வசந்தம் காலனி, திருமால்நகர் என்ற முகவரியில் சென்று இணைக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.