போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு: கடையநல்லூரில் விழிப்புணர்வுப் பிரசாரம்
By DIN | Published On : 05th July 2019 01:23 AM | Last Updated : 05th July 2019 01:23 AM | அ+அ அ- |

கடையநல்லூர் காவல் நிலையப் பகுதியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம், கடைவீதி தெரு, அச்சம்பட்டி, மங்களாபுரம், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் விஜயகுமார் பேசும்போது, சிறுவர்கள் பைக் ஓட்டுவதை பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது. வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவேண்டும் என்றார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.