சுடச்சுட

  

  திருநெல்வேலி விளாகம் பகுதியில் வைக்கோல் படப்பு செவ்வாய்க்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது.
  திருநெல்வேலி விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் தோட்டத்தின் வேலியில் செவ்வாய்க்கிழமை இரவு பிடித்த தீ வைக்கோல் படப்புக்கும் பரவியதாம்.  இத்தகவலறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வகணேஷ் தலைமையில் வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். சேத மதிப்பு ரூ. 5 ஆயிரத்தை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
  இதேபோல ,திருநெல்வேலி நகரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது வீட்டில் இருந்த மின்விசிறியில் புதன்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். அங்கும் பேட்டை தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai