சுடச்சுட

  

  நெல்லை கம்பன் கழகத்தின் 490ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
  பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.ராசகிளி இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். ஆரண்ய காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் சிவ.சத்தியமூர்த்தி சொற்பொழிவாற்றினார். முனைவர் போசு, உசாதேவி, பாப்பையா, ராசகோபால், முத்துசாமி, வை.ராமசாமி, முத்துக்குமார், சேதுமாதவன், மகாராஜன், பேராச்சிமுத்து, ஐயப்பன், கெருடப்பன், சங்கரன், கணேசன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கழகச் செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai