சுடச்சுட

  

  பாளை. தூய சவேரியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

  By DIN  |   Published on : 11th July 2019 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மரியதாஸ் தலைமை வகித்தார். தாவரவியல் துறைத் தலைவர் பெஸ்கி அந்தோணி ராயன் வரவேற்றார். செயலர் அல்போன்ஸ் மாணிக்கம் வாழ்த்திப் பேசினார். 
  திருநெல்வேலி மாவட்ட வனத் துறை அதிகாரி கே.திருமால் தொடக்கவுரையாற்றினார். "காற்று மாசுபடுதல்' குறித்துசிஎஸ்ஐஆர்-என்இஇஆர்ஐ மூத்த முதன்மை விஞ்ஞானி சிவகுமார் பேசினார். "தாமிரவருணி நீர் மாசுபாடு'  குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரோமல்ட் டெரிக் பின்டோ பேசினார். "கழிவு மேலாண்மை மற்றும் காற்று மாசுபாடு' குறித்து ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி சேகர் பேசினார். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகள் சுதாகர் அம்புரோஸ், சுகிர்தராஜ் கோவில்பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விலங்கியல் துறைத் தலைவர் சகாயராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai