சுடச்சுட

  

  "பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து'

  By DIN  |   Published on : 11th July 2019 10:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஸ்காட் குழுமங்களின் நிறுவனர் எஸ்.கிளிட்டஸ்பாபு புதன்கிழமை கூறியது:
  திருநெல்வேலியில் கடந்த 2000இல் தொடங்கப்பட்ட பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரிக்கு, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தால் 10 ஆண்டுகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
  இதன் மூலம் மாணவர்-மாணவிகளுக்கு தொழில்நுட்ப கல்வியையும், செயல்முறை அறிவையும் அதிகப்படுத்த முடியும். பாடங்களை தனித்தனியாக பிரித்து எளிதாக படிக்கவும், உலகளாவிய பல்கலைக்கழக தரத்துடன்கூடிய பாடத்திட்டத்தை உருவாக்கி கற்பிக்கவும் முடியும். 
  இக் கல்லூரி, தன்மேலான கூட்டாண்மை சமூக பொறுப்பிற்காக  சிஎஸ்ஆர் கணக்கெடுப்பில் 7 ஆவது இடத்தையும், தொழில்நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வுக்காக சிஐஐ அமைப்பினால் "கோல்டு' தரத்தையும் பெற்றுள்ளது, மேலும், தேசிய தரச்சான்றுகள் உள்பட பல பட்டங்களைப் பெற்று தென் தமிழகத்தின் சிறந்த கல்லூரியாக விளங்குகிறது என்றார் அவர்.
  பேட்டியின்போது, ஸ்காட் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சி.அருண்பாபு, செயல் இயக்குநர் மெனான்டஸ், பொதுமேலாளர் (நிதி) இக்னேஷியஸ் சேவியர், ஸ்காட் குழுமங்களின் பொதுமேலாளர் (வளர்ச்சி) ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் ஜாய் வின்னிவைஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai