Enable Javscript for better performance
வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை:அதிமுக மாவட்டச் செயலர் அறிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை: அதிமுக மாவட்டச் செயலர் அறிக்கை

    By DIN  |   Published on : 11th July 2019 10:08 AM  |   அ+அ அ-   |    |  

    வீரன் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழாவை முன்னிட்டு ,பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் வியாழக்கிழமை மாலை அணிவிக்கப்படுகிறது.
    இது தொடர்பாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: 
    சுதந்திரப் போராட்ட வீரர்  அழகுமுத்துக்கோனின் குருபூஜையையொட்டி, பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அவருடைய சிலைக்கு எனது ( தச்சை என்.கணேசராஜா) தலைமையில், மாநில அமைப்புச் செயலர் சுதா கே.பரமசிவம் காலை 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 
     இதில் முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.  எனவே, கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    kattana sevai