சுடச்சுட

  

  திருநெல்வேலி மாநகரில் காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில், மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
  தென் மேற்குப் பருவ மழை தொடங்கியதைத்  தொடர்ந்து திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்
  தொடங்கியது. 
  வெள்ளிக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்தது. பகலில் வெயில் மேலும் அதிகரித்து 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.  
  இந்நிலையில் திடீரென மாலையில் மழை பெய்தது. பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி நகரம், பேட்டை, பழைய பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு
  இடங்களில் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai