நெல்லை மாவட்டத்தில் 26 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
By DIN | Published On : 13th July 2019 07:55 AM | Last Updated : 13th July 2019 07:55 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் 26 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாகப் பணியாற்றுவோர் பணித் தகுதியின் பொருட்டும், நிர்வாக நலன்கருதியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பி. முருகன் ஆலங்குளத்திற்கும், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வளர்ச்சி ஊரகம்) எஸ். ராதா, கீழப்பாவூருக்கும், குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கே. குமரன் நான்குனேரிக்கும், தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பி. கணபதி குருவிகுளத்திற்கும், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வெ. சண்முகசுந்தரம் தென்காசிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
நான்குனேரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எஸ். கோபாலகிருஷ்ணன் மேலநீலிதநல்லூருக்கும், குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஸ்ரீனிவாச சுடலைமுத்து மானூருக்கும், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஏ. ஜெயராமன் குருவிகுளத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) து. திருமலைமுருகன் பாளையங்கோட்டைக்கும், பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) எஸ். பார்த்தசாரதி கீழப்பாவூருக்கும், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலசுப்பிரமணியன் பாப்பாக்குடிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பெ. கமலகுமாரி வாசுதேவநல்லூருக்கும், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சி. சந்திரா அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) எஸ். அருணாதேவி செங்கோட்டைக்கும், செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எம்.சிக்கந்தர் பீவி கடையநல்லூருக்கும், கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) டி. முத்துப்பாண்டியன் சங்கரன்கோவிலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கு. சுப்பிரமணியன் அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) என். பாலசுப்பிரமணியன் மானூருக்கும், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) எஸ். பிரம்மநாயகம் நான்குனேரிக்கும், நான்குனேரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) இரா. கணபதி பாளையங்கோட்டைக்கும், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆர். விஜயசெல்வி சேரன்மகாதேவிக்கும், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) என். ருக்மணி அதே ஒன்றியத்தில் (வ.ஊ) பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுசிலா பீட்டர் வள்ளியூருக்கும், வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சி. ஸ்ரீகாந்த் அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) எம். சண்முகநாதன் அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சிக்கும், அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எஸ். நடராஜன் அதே ஒன்றியத்தில் (வ.ஊ) பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.