சுடச்சுட

  

  படகு குழாமில் தண்ணீர் இல்லாததால் குற்றாலத்தில் படகு சவாரி தொடங்குவதில் தாமதம்

  By DIN  |   Published on : 13th July 2019 10:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி வெண்ணைமடை குளத்தில் தண்ணீர் இல்லாததால்  படகு சவாரி தொடங்கப்படவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
  சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்வதுடன் பூங்கா,
  படகு குழாமில் குழந்தைகள், குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பது வழக்கம். குற்றாலம் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள வெண்ணைமடை குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி நடைபெறும். 
  இதற்காக இந்த படகு குழாமில் தனி நபர் படகு, இருவர் செல்லும் வகையிலான மிதி படகு, நான்கு பேர் செல்லும் மிதி படகு, மற்றும் துடுப்பு படகு என மொத்தம் 34 படகுகள் உள்ளன. இந்த வெண்ணைமடைகுளத்திற்கு ஐந்தருவியிலிருந்து தண்ணீர் வருகிறது.
  2018 இல் மே மாத இறுதியில் சீசன் களை கட்டதொடங்கியதை அடுத்து இந்தக் குளமும் நிரம்பியதால், படகு சவாரியும்  முன்கூட்டியே தொடங்கப்பட்டது. நிகழாண்டு இதுவரை குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் படகு சவாரியும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.  
  தற்போது குற்றாலம் அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. குற்றாலம் அருவிகளுக்கு தினமும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். படகு சவாரியும் தொடங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai