நெல்லையில் போக்குவரத்துக்கழக  தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்துக் கழக வரவு- செலவு, பற்றாக்குறை ஆகியவற்றை முழுமையாக அரசே ஏற்று பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்;  240 நாள்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி
நிரந்தரம் செய்ய வேண்டும்; 1.4.2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்புச் செயலர் ஏ.தர்மன் தலைமை வகித்தார். சிஐடியூ மாநிலக்குழு உறுப்பினர்
எஸ்.பெருமாள், ஏஐடியூசிதுணைப் பொதுச்செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன், ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.சுப்பிரமணியன், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com