சுடச்சுட

  


  கடையநல்லூர் கோல்டன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, நல உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது.
  இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முத்துக்குமார் தலைமை வைத்தார். ரோட்டரி சங்கத்தின் துணைஆளுநர் ஷேக்சிக்கந்தர், இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல் வஹாப் இறைவணக்கம் பாடினார். விழாவில், தலைவராக இண்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் முகமதுஹபீப், செயலராக உஸ்மான் மைதீன் மற்றும்  நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
  தொடர்ந்து, கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள பள்ளிகளில்  10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் 30 பேருக்கு பரிசுகள், பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், ஆடு மற்றும் பள்ளிக் கூடங்களுக்கு மின் விசிறி, இருக்கைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. 
  விழாவில், கானித் செய்யதுஅகமது, டாக்டர் மீரான் மைதீன், திருமலைக்குமாரசுவாமி, அயூப்கான், செய்யதுமுகைதீன், கனகராஜ், கருப்பசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai