சுடச்சுட

  


  தினமணி செய்தி எதிரொலியால் குண்டும், குழியுமாக காட்சியளித்த திப்பணம்பட்டி-அரியப்பபுரம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
   பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் இருந்து அரியப்பபுரம் செல்லும் ஊராட்சி ஒன்றிய சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்குசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இச்சாலையில் தற்போது ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி குண்டும், குழியுமாக காட்சியளித்தது.  இது குறித்து  அண்மையில் தினமணியில் செய்தி வெளியானது.
   இதையடுத்து,  அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து, புதிய  தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai