சுடச்சுட

  

  நெல்லையில் சட்ட விரோதமாக ரயில்வே தட்கல் டிக்கெட் விற்பனை: ஒருவர் கைது

  By DIN  |   Published on : 14th July 2019 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருநெல்வேலியில் சட்ட விரோதமாக ரயில்வே தட்கல் டிக்கெட் விற்பனை செய்ததாக தனியார் டிராவல்ஸ் உரிமையாளரை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  திருநெல்வேலி பகுதியில் போலி ஐடி மூலம் ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்து வருவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே பாதுகாப்பு கோட்ட ஆணையர் ஜெகநாதன் உத்தரவின் பேரில் ரயில்வே பாதுகாப்பு கோட்ட உதவி ஆணையர் சிவசங்கரன் மேற்பார்வையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கிரண் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மாரியப்பன், மனோகரன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திருநெல்வேலி பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினர். 
  இச் சோதனையின் போது, திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாபு சேகர் என்பவர் போலி ஐடி மூலம் தட்கல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவர் பயன்படுத்திய கணினியையும் பறிமுதல் செய்தனர்.  இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தரப்பில் கூறியது: 
  பொதுமக்களின் நலன் கருதி ஐஆர்சிடிசி நிறுவனம் ரயில்வே தட்கல் நேரமான காலை 10 மணி முதல் 12 மணி வரை முகவர்கள் டிக்கெட் எடுக்க இயலாதவண்ணம் செய்துள்ளது. இதில் சில முகவர்கள் போலியாக பொதுமக்கள் போன்று ஐடிகளை உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்கின்றனர்.  இதில் திருநெல்வேலி தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு சேகர், ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 கூடுதலாக பெற்றுக்கொண்டு விற்பனை செய்து வந்துள்ளார். 
  இவர் அலுவலகத்தில் இருந்து ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai