சுடச்சுட

  

  பாளை. தலைமை அஞ்சலகத்தில்ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படும்

  By DIN  |   Published on : 14th July 2019 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பாளையங்கோட்டையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவை மையம் செயல்படவுள்ளது.
  இது தொடர்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  இந்திய அஞ்சல் துறை சார்பில் திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் உள்ள 3 தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், 44 துணை அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
  பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையம் வரும் 14-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படவுள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai