சுடச்சுட

  


  திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஆதார் சேவை மைய திறப்பு விழா  நடைபெற்றது. 
  ஆதார் சேவை மையத்தை பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் ரா. சஜிகுமார் தொடங்கி வைத்தார். மேலும், அவர் ஆதார் சேவை மையத்தின் பயன்பாடுகள்  குறித்து பேசினார். 
  இந்த ஆதார் சேவை மையத்தின் மூலம் புதிய ஆதார் பதிவு செய்யலாம். ஆதார் சம்பந்தப்பட்ட பெயர் மாற்றம், செல்லிடப்பேசி எண் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவை  நாகர்கோவில் மற்றும் இதர பகுதிகளுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai