சுடச்சுட

  

  மணிமுத்தாறு வனப்பேச்சியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு வழிபாடு

  By DIN  |   Published on : 14th July 2019 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மணிமுத்தாறு அருவிப் பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் மழை வேண்டி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.  
  மணிமுத்தாறு அருவியில் அமைந்துள்ள இத்திருக் கோயிலில் ஆண்டுதோறும் அனுஷம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடைபெறும்.  நிகழாண்டு வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.  
  இதையொட்டி, வனப்பேச்சியம்மன், பிரம்மகுலராட்சதை , பிரம்மாட்சி அம்மன் மற்றும் சங்கிலி பூதத்தார், பட்டவராயன், தளவாய் மாடசாமி, கும்பாமுனி பெரியசாமி, அகத்தியர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. 
  மேலும் அம்மனுக்கு சந்தனக் காப்பு  அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மழை வேண்டி மணிமுத்தாறு அருவியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
   நிகழ்ச்சியில் மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி  ஆகிய பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai