சுடச்சுட

  

  விபத்துகள் அதிகரிப்பதாக புகார் நெல்லை- அம்பை சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th July 2019 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் பிரதானச் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளதால் பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்ற வகையில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
  திருநெல்வேலி-பாபநாசம் இடையே 45 கி.மீ. தொலைவுள்ள பிரதானச் சாலையில் 10 கி.மீ. தொலைவு சேதமடைந்தும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. சாலை முறையான பராமரிப்பு இல்லாமலும், அகலப்படுத்தாத காரணத்தாலும் அண்மை காலமாக விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. 
  இந்த வழித் தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இடைநில்லாப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்துகளும் அதிவேகத்துடன் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குற்றாலம் சீசன் பருவத்திலும், பக்தர்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் காலத்திலும் இந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கின்றன. 
  இதுதவிர, ஏப்ரல், மே கோடை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை என ஆண்டு முழுவதும் இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லுவதால் போக்குவரத்து மிகுந்த வழித்தடமாக திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் பிரதானச் சாலை மாறிவிட்டது.
  ஆகவே, போக்குவரத்து அதிகரித்துள்ள திருநெல்வேலி-அம்பாசமுத்திரம்-பாபநாசம் பிரதானச் சாலையை 7.5 மீட்டர் அகலத்துக்கு பதிலாக 10.5 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் தேவையான இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைத்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai