களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் இன்று வருஷாபிஷேகம்
By DIN | Published On : 15th July 2019 07:10 AM | Last Updated : 15th July 2019 07:10 AM | அ+அ அ- |

களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் கோயில் வருஷாபிஷேகம் திங்கள்கிழமை (ஜூலை 15) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் தொடர்ந்து பூர்ணாஹுதி தீபாராதனையும் நடைபெறும். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சத்தியவாகீஸ்வரர், கோமதியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 7 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா வருதலும் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினர், பக்தர் பேரவையினர் செய்துள்ளனர்.