காமராஜர் பிறந்த தினம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி  த.மா.கா. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்த தினத்தையொட்டி  த.மா.கா. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் உருவச்சிலைக்கு த.மா.கா. மாநிலச் செயலர் என்.டி.எஸ். சார்லஸ் மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அய்யாத்துரை தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர்  தியாகராஜ், நிர்வாகிகள் வின்சென்ட், கஸ்பார், ரூபன் கனகராஜ், முருகேசன், சுடர்ஒளிவு, இளையபாரதி, வசந்தன், சிவலிங்கம், அருண், மூக்கையா, வெள்ளத்துரை, சேகர், சண்முகவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com