காயங்களுடன் முதியவர் சடலம்:போலீஸார் விசாரணை
By DIN | Published On : 19th July 2019 12:43 AM | Last Updated : 19th July 2019 12:43 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் அருகே முதியவர் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்துகிடந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த வள்ளிகண்ணு மகன் கருப்பையா(75). இவர் தன் மகன் வள்ளிநாயகம் வீட்டில் தங்கியிருந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, கருப்பையா கத்திக்குத்துக் காயங்களுடன் இறந்துகிடந்தாராம்.
தகவலின்பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.