செங்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணிக்கு 13 பேட்டரி வாகனங்கள்
By DIN | Published On : 19th July 2019 12:43 AM | Last Updated : 19th July 2019 12:43 AM | அ+அ அ- |

செங்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு, 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 7 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
குப்பைகளை சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில், 22 நிரந்தர துப்புரவுப் பணியாளர்களும், 44 ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களும் உள்ளனர். இவர்கள் பயன்பாட்டுக்காக ரூ.23.4 லட்சம் மதிப்பில் 13 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை இயக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடேஷ், துப்பரவு ஆய்வாளர் மகேஸ்வரன், பொதுப்பணி மேற்பார்வையாளர் விஜயராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். பேட்டரி வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.