சேரன்மகாதேவி, மேலக்கல்லூர், கரிசல்பட்டியில் நாளை மின்தடை
By DIN | Published On : 19th July 2019 12:44 AM | Last Updated : 19th July 2019 12:44 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும், மேலக்கல்லூர் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது.
இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் (விநியோகம்) ஏ.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேலக்கல்லூர் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி பிற்பகல் 1 மணி வரை மேலக்கல்லூர், சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
கரிசல்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, கீழ உப்பூரணி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.