பாளை.யில் நூல் வெளியீடு
By DIN | Published On : 19th July 2019 05:17 AM | Last Updated : 19th July 2019 05:17 AM | அ+அ அ- |

திருநெல்லை பரசமயக்கோளரியார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்' என்ற நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் இதயம் நிறுவன அதிபர் முத்து தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குநர் ராசேந்திரன் நூலை வெளியிட, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை முன்னாள் தலைவர் குமரேசன் பெற்றுக்கொண்டார்.
ம.தி.தா. இந்துக் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் கட்டளை கைலாசம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர் மகாலிங்கம் ஐயப்பன், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற செல்லப்பா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நூலாசிரியர் குரு.சண்முகநாதன் ஏற்புரை ஆற்றினார். மாவட்ட மைய நூலகர் முத்துக்கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.