அருவிகளில் மிதமான தண்ணீர்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அருவிகளில் மிதமான தண்ணீர்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
குற்றாலத்தில் நிகழாண்டில் சீசன் தொடங்கியபோது சில தினங்கள் மட்டுமே களைகட்டியது. தொடர்ந்து சாரல் மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்தது.
பேரருவியில் சனிக்கிழமை அதிகளவில் தண்ணீர் விழுந்ததால் அருவியின் மையப் பகுதியில் யாரும் செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை தண்ணீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து தடுப்புகள் அகற்றப்பட்டு பேரருவியின் மையப் பகுதி வரையிலும் சென்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. வாகனங்களின் வருகை அதிகளவில் இருந்ததால் போக்குவரத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. செங்கோட்டை மற்றும் மதுரையிலிருந்து காசிமேஜர்புரம் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் குற்றாலம் நுழைவுவாயிலிருந்து திருப்பிவிடப்பட்டு, குற்றாலம் ராமாலயம் வழியாக குற்றாலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
அதேபோல் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டணம் வசூலிக்கும் பகுதியிலிருந்து இலஞ்சி செல்லும் சாலையில் பெரிய வாகனங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com