நெல்லையப்பர் கோயிலில் 25இல் ஆடிப்பூரத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதிஅம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதிஅம்மன் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதிஅம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும். நிகழாண்டுக்கான திருவிழா  இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. 
தொடக்க நாளான வியாழக்கிழமை (ஜூலை 25) காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். 4ஆம் திருநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) நண்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்மன்  4 ரதவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.  10ஆம் நாள் திருநாளான ஆகஸ்ட் 3 ஆம் தேதி  இரவு 6.40-க்கு மேல் 7.10-க்குள் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாள் நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com