Enable Javscript for better performance
ஐந்தருவி வெண்ணைமடை குளத்தில் படகு சவாரி தொடங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஐந்தருவி வெண்ணைமடை குளத்தில் படகு சவாரி தொடங்க கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள வெண்ணைமடை குளத்தில் படகு சவாரி தொடங்க வேண்டும் என, சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்வதுடன் பூங்காக்களிலும், படகு சவாரி செய்தும் பொழுதுபோக்குவர். நிகழ்வாண்டு, குற்றாலத்தில் சீசன் தொடங்கியதுமுதல் அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.
    குற்றாலம் - ஐந்தருவி  சாலையில் உள்ள வெண்ணைமடை குளத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படும். இக்குளத்துக்கு ஐந்தருவியிலிருந்துதான் தண்ணீர்வரும். நிகழாண்டு ஐந்தருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்ததால் இக்குளத்துக்கு நீர்வரத்து இல்லை.
    இதனிடையே,  சில நாள்களாக குற்றாலம் பகுதியில் பெய்த சாரல், ஐந்தருவியில் கொட்டிய தண்ணீர் ஆகியவை காரணமாக வெண்ணைமடை குளம் நிரம்பியது; சவாரிக்காக படகுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும் படகு சவாரி தொடங்கவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எனவே,  வெண்ணைமடை குளத்தில் படகு சவாரியை விரைந்து தொடங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai