Enable Javscript for better performance
கடையநல்லூர் அருகே அபாய நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி: எம்எல்ஏ ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கடையநல்லூர் அருகே அபாய நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி: எம்எல்ஏ ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையநல்லூர் அருகே திரிகூடபுரத்தில் அபாய நிலையிலுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை கடையநல்லூர்  எம்எல்ஏ முகமதுஅபூபக்கர் ஆய்வுசெய்தார்.
    திரிகூடபுரம் ஊராட்சி விவேகானந்தர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அபாய நிலையிலுள்ளன. இதன் அருகேதான் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. தொட்டியிலிருந்து சிமென்ட் பூச்சுகள் உடைந்து விழுவதால், இத்தொட்டியை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். தகவலறிந்த முகமதுஅபூபக்கர் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை இரவு அத்தொட்டியைப் பார்வையிட்டார். கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலர் செல்லத்துரை, திரிகூடபுரம் கிளைச் செயலர் சுப்பிரமணியன், இளைஞரணி ராஜ்குமார், முஸ்லிம் லீக் தென்மண்டல இளைஞரணிச் செயலர் கடாபி உள்ளிட்டோர் உடன் சென்றனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் எம்எல்ஏ வலியுறுத்தினார். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai