Enable Javscript for better performance
செங்கோட்டை பிரானூர் பார்டரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செங்கோட்டை பிரானூர் பார்டரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 25th July 2019 06:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சுற்றுலாத் தலமான குற்றாலத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அப்போது, செங்கோட்டை பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள உணவகங்களுக்கு வரும் அவர்கள், தங்களது வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்துகின்றனர். இதனால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. கொல்லம்  - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலையும் விபத்து அபாயமும் உள்ளது. சில நேரங்களில் சுற்றுலாப் பயணிகளிடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்படுகின்றன.  
    எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai