Enable Javscript for better performance
தென்காசியில் ஜூலை 28இல் குழந்தைகளுக்கு இலவச இதயப் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தென்காசியில் ஜூலை 28இல் குழந்தைகளுக்கு இலவச இதயப் பரிசோதனை முகாம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தென்காசியில் இம்மாதம் 28ஆம்தேதி குழந்தைகளுக்கான இலவச இதயப் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து மருத்துவர் எம். அப்துல் அஜீஸ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 
    சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குற்றாலம், செங்கோட்டை ரோட்டரி சங்கங்கள் இணைந்து குழந்தைகளுக்கான இலவச இதயப் பரிசோதனை முகாமை தென்காசி எம்.கே.வி.கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இம்மாதம் 28ஆம் தேதி நடத்துகின்றன.
    பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது வரையிலான அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். ஏற்கெனவே சிகிச்சை பெறும் குழந்தைகள் வரும்போது தங்களது பழைய சிகிச்சை குறிப்பு அறிக்கைகளை (ரிப்போர்ட்) கொண்டு வரவேண்டும். இதய அறுவைச் சிகிச்சை தேவை எனக் கண்டறியப்படுவோருக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இலவச அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.
    அடிக்கடி சளி, குறைவான உணவு உள்கொள்ளுதல், இதய படபடப்பு, உடல் எடை அதிகரிக்காதது, நடுக்கம், நினைவிழத்தல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் நீலநிறமாதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனைக்கு அழைத்துவரலாம். முகாம் காலை 9 முதல் பிற்பகல் 2மணிவரை  நடைபெறும் என்றார் அவர்.
    ரோட்டரி ஆளுநர் முகம்மதுசலீம், ரோட்டரி மாவட்டச் செயலர் ஐ.ஏ.சிதம்பரம், ஆர். முருகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai