Enable Javscript for better performance
நெல்லை கம்பன் கழகத்தின் கம்பராமாயண சொற்பொழிவு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை கம்பன் கழகத்தின் 492 ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
    பாளையங்கோட்டை  அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அ.ராசகிளி இறைவணக்கம் பாடினார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றார். "இராவணி' என்ற தலைப்பில் ச.நெல்லையப்பனும், "ஆரண்ய காண்டம்' என்ற தலைப்பில் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். நிகழ்ச்சியில் போஸ், முத்துக்குமார், மகராஜன், பேராச்சிமுத்து, கணேசன், ஜெயா, நாகராஜன், சங்கரன், பாண்டியன், கிருஷ்ணன், பெருமாள், குருசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். செயலர் கவிஞர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.


    கம்பன் இலக்கிய சங்கத்தில்...
    கம்பன் இலக்கியச் சங்கத்தின் 1194 ஆவது தொடர் சொற்பொழிவு பாளை.யில் அண்மையில் நடைபெற்றது.
      பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் கு.சடகோபன் தலைமை வகித்தார். பிரபா கிருட்டிணன் இறைவாழ்த்து பாடினார். ஆசிரியர் பா.முருகன் வரவேற்றார். "பெரியபுராணம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர் ராகுலும், "குகன்' குறித்து பி.சுந்தரமும், "எழுத்தாளர் சீனி வெங்கடாசலத்தின் நூல்' குறித்து பேராசிரியர் பா.வளன்அரசும் சொற்பொழிவாற்றினர். 
    நிகழ்ச்சியில், நெல்லை காவியன், ராமகிருஷ்ணன், ஆசிரியர் கோதைமாறன், நெல்லையப்பன், கிருஷ்ணமூர்த்தி, நாகராசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இணைச் செயலர் இரா.முருகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai