Enable Javscript for better performance
நெல்லை சட்டக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடவு- Dinamani

சுடச்சுட

    

    திருநெல்வேலி சட்டக்கல்லூரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் புதன்கிழமை நடப்பட்டன.
    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உள்பட 9 வட்ட சட்டப் பணிகள் குழுவில் இணைந்து சட்டப் பணிகள் ஆற்றி வரும் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தலா 10 மரக்கன்றுகள் நட திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது உத்தரவிட்டார். 
    இதையடுத்து திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் புதன்கிழமை  மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். 
    திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான பி.வி.வஷீத்குமார், திருநெல்வேலி வழக்குரைஞர் சங்க தலைவர் சிவசூர்யநாராயணன், திருநெல்வேலி சட்டக்கல்லூரி முதல்வர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
    திருநெல்வேலி சட்டக்கல்லூரியிலும், திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சார்பு நீதிபதி பி.வி.வஷீத்குமார் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai