Enable Javscript for better performance
நெல்லை மாநகராட்சிக்கு புதிதாக 32 குப்பை சேகரிப்பு வாகனங்கள்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாநகராட்சிக்கு புதிதாக 32 குப்பை சேகரிப்பு வாகனங்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாநகராட்சிக்கு புதிதாக 32 குப்பை சேகரிப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
      திருநெல்வேலி மாநகராட்சியில் தினமும் 140 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குப்பைகள் அளவு 20 டன்கள் வரை அதிகரிக்கும். இவை அனைத்தும் சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டியில் உள்ள குப்பைக்கிடங்கில் மேலாண்மை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக ஒவ்வொரு வார்டிலும் திடக்கழிவு மேலாண்மைக்காக சுகாதார பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து இப் பூங்காக்களில் மட்கும் குப்பைகளை உரமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதோடு, துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளைச் சேகரிக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வருபவர்களிடம் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளைத் தனித்தனியாக பிரித்து கொடுத்து பொதுமக்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
      திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக 270 பேட்டரி மூன்று சக்கர சைக்கிள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 72 பேட்டரி வாகனங்கள் வந்த நிலையில், 2 ஆம் கட்டமாக 32 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை வந்தன. அவற்றை திருநெல்வேலி, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டல பகுதிகளுக்குப் பிரித்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பேட்டரி வாகனங்கள் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai