Enable Javscript for better performance
நெல்லை மாவட்டத்தில் 5,651 குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளியில் சேர்ப்பு: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை மாவட்டத்தில் 5,651 குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளியில் சேர்ப்பு: ஆட்சியர்

    By DIN  |   Published on : 25th July 2019 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் 5,651 குழந்தைத் தொழிலாளர்கள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 
      திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட செயல்பாடுகள், பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 1996-இல் தொழிலாளர் துறை மூலம் நடத்தப்பட்ட குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பின்போது 63,316 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் 1999-ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
     2000-ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் 50 குழந்தைகளுக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 குழந்தைகளுக்காக மாவட்டத்தில் 50 இடங்களில் சிறப்புப் பள்ளிகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இச்சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் 2 முதல் 3 ஆண்டுகளில் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
     இதுவரை 5,651 குழந்தைகள் முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூனில் 51 குழந்தைகள் முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 5,546 குழந்தைகளுக்கு தொழிற்கல்வி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 14 இடங்களில் 285 குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன. 
    சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு நோட்டுப் புத்தகங்கள் சீருடை மற்றும் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது என்றார்.  இந்நிகழ்ச்சியில் குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு முறையான பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவி ஜெனிபருக்கு பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான உதவித் தொகையை ஆட்சியர்  வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai