Enable Javscript for better performance
பக்ரீத் பண்டிகை: மாநகராட்சி ஆணையரிடம் மமக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுக்கப்படும் பிராணிகளின் இறைச்சிக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநகராட்சி ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.
    இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் பகுதி தலைவர் ஏ.எம்.மைதீன் பாஷா அளித்துள்ள மனு:  நிகழாண்டு பக்ரீத் பண்டிகை  ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போது தொடர்ச்சியாக 3 நாள்கள் அனைத்து வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் குர்பானி பிராணிகளை பலியிட்டு அதன் இறைச்சிகளை ஏழை, எளிய மக்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கவுள்ளோம். 
    பலியிடப்படும் பிராணிகளின் ரத்தம், குடல் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த மேலப்பாளையம், பேட்டை, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் போன்ற பகுதிகளில் துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு வார்டு வாரியாக கூடுதல் வாகனங்களை வழங்க வேண்டும். மேலும், தார்ப்பாய், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவற்றை கடந்த ஆண்டு வழங்கியதைப் போன்று நிகழாண்டும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai