Enable Javscript for better performance
புளியங்குடி கோயிலில் ஆடிக் கார்த்திகை திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புளியங்குடி கோயிலில் ஆடிக் கார்த்திகை திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புளியங்குடி அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கார்த்திகை திருவிழா புதன்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது.
    இதையொட்டி,  காலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர்,   அலங்கார முருகன் என்ற தலைப்பில் வாசுகி மனோகரனின் சொற்பொழிவு நடைபெற்றது.
    தொடர்ந்து, வியாழக்கிழமை (ஜூலை  25) கவிஞர் நந்தலாலா தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை பால்குட ஊர்வலம், சுவாமி அழைப்பு, கும்ப ஜெபம், மூலவருக்கு பாலாபிஷேகம், உற்சவமூர்த்தியை மண்டகப்படிக்கு அழைத்து வருதல், ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் புஷ்ப அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். 
    ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவர் சுந்தர்ராஜ், கெளரவத் தலைவர் பி.எஸ். சங்கரநாராயணன், துணைத் தலைவர்கள் கணேசன், எஸ்.வி. முருகையா, செயலர் அருணாசலம்,  துணைச் செயலர்கள் சண்முகசுந்தரம், ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai