Enable Javscript for better performance
பெண்ணை தாக்கி மானபங்க முயற்சி:  2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணை தாக்கி மானபங்க முயற்சி:  2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 25th July 2019 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களக்காடு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்ய முயன்ற வழக்கில் 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை,   ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
      களக்காடு அருகேயுள்ள வடுவூர்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பேராச்சி. இவர்,  அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் அளித்த தீண்டாமை வழக்கில் சிறையில் இருந்த நண்பர் பீட்டரை ஜாமீனில் எடுக்க உதவியுள்ளார். 
     இதனால் பேராச்சிக்கும், பன்னீர்செல்வத்தின் மகன் பேரின்பநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
      இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மாலையில் மேலச்செவல்- வடுவூர்பட்டி பிரதான சாலையில் உள்ள பாலம் அருகே  பேராச்சி,  அவருடைய மனைவி சங்கரம்மாள் (36) ஆகியோர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது,  அங்கு வந்த வடுவூர்பட்டி  பேரின்பநாதன் (37), சுபேந்திரன் (35),  ராவணன் மகன் மதன் (எ) சத்திய முருகன் ஆகிய 3 பேரும் பேராச்சி தங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி  சங்கரம்மாளை வழிமறித்து அவதூறாக  பேசி, தாக்கியதோடு  ஜாக்கெட்டை கிழித்து மானபங்கப்படுத்த முயன்றனராம். இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் பேராச்சியை தாக்கி முள்புதரில் வீசிய தோடு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
    இது குறித்து சங்கரம்மாள், களக்காடு போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த  போலீஸார்,  பேரின்பநாதன், சுபேந்திரன், மதன் (எ) சத்தியமுருகன் ஆகியோரை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்த போது மதனுக்கு 17 வயது என்பதால், அவர் தொடர்பான வழக்கு சிறுவர் நீதிமன்றத்திற்கு  மாற்றம் செய்யப்பட்டது.   மற்ற 2 பேரின் மீதான வழக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம் சாட்டப்பட்ட பேரின்பநாதன், சுபேந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பால்கனி ஆஜரானார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai