Enable Javscript for better performance
மாவட்ட கபடி போட்டி: கூடங்குளம் அணி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    வள்ளியூர் அருகே உள்ள சீயோன்மலையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் கூடங்குளம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
    வள்ளியூர் அருகே உள்ள சீயோன்மலை காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டிகளை வள்ளியூர் செல்டன் சர்ட் பி.ஞானராஜ் தொடங்கிவைத்தார். இந்த போட்டியில் கூடங்குளம், பணகுடி, பரப்பாடி, சீயோன்மலை, சண்முகபுரம், டோனாவூர், திருமலாபுரம் உள்பட 16 அணிகள் கலந்துகொண்டன. இறுதிப் போட்டியில் கூடங்குளம் அணியும்,  பணகுடி அணியும் மோதின.  இதில் கூடங்குளம் அணி வெற்றி பெற்றது.
    பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு  விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். முதல் பரிசு பெற்ற கூடங்குளம் அணிக்கு செல்டன் பி.ஞானராஜ் ரூ.10 ஆயிரம் பரிசளித்தார். 2-ஆம் இடத்தைப் பெற்ற பணகுடி அணிக்கு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலர் டி.பத்மசிங் செல்வமீரான் ரூ. 8 ஆயிரம் பரிசளித்தார். 3-ஆம் இடத்தைப் பெற்ற மெஞ்ஞானபுரம் அணிக்கு பி.ஐசக் நெல்சன் ரூ. 6 ஆயிரம் பரிசளித்தார். 4-ஆம் இடத்தைப் பெற்ற சண்முகபுரம் அணிக்கு சி.பவன்ராஜ் ரூ. 4ஆயிரம் பரிசளித்தார்.
    இதில்,  சீயோன்மலை கிராம காங்கிரஸ் தலைவர் ஆல்பர்ட்,  வேதசிகாமணி,  ராஜேந்திரன், ரத்தினசிகாமணி, செந்தில்வேல், இளையபெருமாள், ராசையா, வள்ளியூர் ஜாண்கென்னடி, சாமுவேல் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பின்  தலைவர் ஜோசப், செயலர் பிரவீன்ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai