Enable Javscript for better performance
வி.கே.புரம் அருகே பாஜக சார்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்: தமிழிசை பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வி.கே.புரம் அருகே பாஜக சார்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்: தமிழிசை பங்கேற்பு

    By DIN  |   Published on : 25th July 2019 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக சார்பில் விக்கிரமசிங்கபுரம்அருகேயுள்ள முத்துநகர் முதலியார்பட்டியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கொடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறவும், பனைத் தொழிலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத் துறை கெடுபிடி செய்யக் கூடாது. கோயில் விழாக்களுக்கு காவல் துறையினர் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது.
    நெல்லையில் முன்னாள் மேயர் உள்பட 3 பேர், தூத்துக்குடியில் திமுக நிர்வாகி ஆகியோர் கொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
    தொடர்ந்து, அம்பலவாணபுரத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
    நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, மாவட்டத் தலைவர் தயாசங்கர், பொதுச்செயலர் டி.வி. சுரேஷ், மகாராஜன், மாவட்ட துணைத் தலைவர் ராமராஜபாண்டியன், மங்களசுந்தரி, இளைஞரணித் தலைவர் மகேஷ் சுப்பிரமணி, நகரத் தலைவர் தங்கேஸ்வரன், ஊர்த் தலைவர் பாஸ்கர், ராமசாமி, நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai