Enable Javscript for better performance
விஸ்வகர்ம மகாஜன சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன சங்க செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
    தலைவர் எம்.சுடலைமுத்து தலைமை வகித்தார். அவைத் தலைவர் வி.அனந்தநாராயணன் முன்னிலை வகித்தார். செயலர் தங்கவேல் தீர்மானங்களையும், பொருளாளர் எஸ்.மாசானமுத்து வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர். பாளை.யில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சங்கத்தின் 14 ஆவது ஆண்டு விழாவை நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டது. திருநெல்வேலி மாநகரத்தில் வசிக்கும் விஸ்வகர்ம சமுதாய மாணவர்கள் 10 ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் அதுகுறித்து விவரங்களையும், மதிப்பெண் சான்று நகல்களையும் ஏ.தங்கவேல், 25-எல்லாம் வல்லவன் தெரு, சமாதானபுரம், பாளையங்கோட்டை என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai