தென்காசியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 29th July 2019 07:18 AM | Last Updated : 29th July 2019 07:18 AM | அ+அ அ- |

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் சுமதி, துணைச் செயலர் பிச்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் உச்சிமாகாளி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துகுமார், பாலசுப்பிரமணியன், கற்பகம், ஒன்றியச் செயலர்கள் துரைபாண்டியன், லியாகத்அலி, பண்டாரம், முருகையாபாண்டியன், நகரச் செயலர் கமாலுதீன், தென்காசி நகர நிர்வாகிகள் வழக்குரைஞர் கண்ணன், திருமலைக்குமார், மைமூன்பீவி, செந்தில், பாலகணேசன், பேரூர்கழக செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.