முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
இலஞ்சி பாரத் பள்ளியில் கலைத்திறன் போட்டிகள்
By DIN | Published On : 30th July 2019 07:33 AM | Last Updated : 30th July 2019 07:33 AM | அ+அ அ- |

இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "பெகாசஸ்-2019' கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பாரத் கல்விக் குழுமச் செயலர் காந்திமதி தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தார். கல்வி ஆண்டு இயக்குநர் ராதாபிரியா மோகன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் உஷா ரமேஷ், மரிய ஹேமலதா, பாரத் வித்யா மந்திர் பள்ளி முதல்வர் வனிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். மாணவி நிவேதிதா நிகழ்ச்சிகளைதொகுத்து வழங்கினார். மாணவி அமர்ணாதேவி வரவேற்றார். சமீரா நன்றி கூறினார்.
மழலையர்பிரிவு 1முதல் 3ஆம் வகுப்பு, 4 முதல் 5ஆம் வகுப்பு, 6 முதல் 8ஆம் வகுப்பு, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள் பிரிவு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கு என பல்வேறு பிரிவுகளாக கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில், 25 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழாவுக்கு, கல்வி ஆண்டு நிர்வாக இயக்குநர் மோகன் தலைமை வகித்தார். சுட்டி ஸ்டார் விருது பெற்ற மாணவர் பாரத் வித்யா மந்திர் பள்ளி மாணவர் சுந்தர்ராஜனுக்கு பள்ளியின் முதன்மை முதல்வர் விருது வழங்கினார்.
போட்டிகளில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஆக்சிஸ் வங்கியின் இலஞ்சி கிளை மேலாளர் சுந்தரமூர்த்தி கேடயங்களை வழங்கினார்.
ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.