முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
உலக புலிகள் தின விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 30th July 2019 07:37 AM | Last Updated : 30th July 2019 07:37 AM | அ+அ அ- |

உலக புலிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு வனத்துறை சார்பில், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் திருமால் உத்தரவின்பேரில் நடைபெற்ற இம் முகாமுக்கு, சிவகிரி வனச்சரக அலுவலர் பி.கே. ஸ்டாலின் தலைமை வகித்து, புலிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், வனவர் முருகன், பொய்கை இயற்கைப் பாதுகாப்பு சங்க நிர்வாகி சேக் உசேன், சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சக்திவேல், உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேல், வனக் காப்பாளர், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர், மாணவிகள் பங்கேற்றனர்.
அம்பையில்...
அம்பாசமுத்திரத்தில் வனத்துறை சார்பில் உலக புலிகள் தின விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வனச்சரகர் கார்த்திகேயன்தலைமை வகித்தார். பேரணியை, அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் கொடியசைத்துதொடங்கிவைத்தார். பேரணியில், ஆலங்குளம் ஆர்ச் வெல் பள்ளி மற்றும் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு புலி வேடமணிந்தும் புலி முகமூடியணிந்தும், புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடிசென்றனர்.
வனச்சரக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி அம்பாசமுத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் நிறைவடைந்தது. பேரணியில் ஆசிரியர்கள், வனக்குழு உறுப்பினர்கள்,வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வனவர் முருகேசன் நன்றிகூறினார்.