முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
நெல்லையில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 30th July 2019 10:04 AM | Last Updated : 30th July 2019 10:04 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் துறையில் வாரம் 5 நாள்கள் வேலைநாள்களாக அறிவிக்க வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊழியர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும். நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் உள்ளிட்டோரையும் குரூப்-பி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எம்.எஸ். பிரிவு உதவிச் செயலர் பழனிசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்டச் செயலர் எஸ்.கே. ஜேக்கப்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், நடராஜன், பாட்ஷா, ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.